Tuesday, September 11, 2007

Autograph -3

ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவு எழுதறேன். எப்பவும் போல ஆதரவு கொடுக்கனும்.

இரண்டாவது வரை நான் இராஜபாளயத்துல படிச்சேன். அப்புறம் அப்பாவுக்கு இராமனாதபுரத்துக்கு மாற்றலாயிடுச்சு... கட்டு மூட்டைய... அப்பா சின்ன வயசுல வளந்த ஊர் அதனால அவருக்கு ஒரே சந்தோஷம் ஆனா எங்களுக்கோ இஷ்டமே இல்ல. ஆனா என்ன பண்றது...

ரொம்ப கொஞ்சம் தான் எழுதியிருக்கேன். தினமும் எழுதுறேன்...

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்









Thursday, February 22, 2007

அய்யோ பயமா இருக்கு…

இணையம் இந்த நூற்றாண்டோட மிக சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கு. அதுலயும் வலைபதிவு அப்படிங்கறது இப்போ நல்லா பிரபலமாகிட்டு வருது. என்னை பொருத்தவரை வலைபதிவு அப்படிங்கறது ஒரு தனி மனிதரோ இல்லன்னா ஒரே அலைவரிசைல இருக்கற ஒரு குழுவோ தங்களோட உணர்வுகள சேமிச்சு வெக்கிற ஒரு இடமாக தான் நினைக்கிறேன். ஆனா இப்போ நடக்கறது என்ன?


ஒருத்தர ஒருத்தர் திட்டறதும், சண்டை போடுறதும், criticize பண்றதும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்த நாம சரியா பயன் படுத்தலையோன்னு தோனுது. மாத்தி மாத்தி சண்டை போடுறதுனாலையோ இல்ல தனிமனித அல்லது ஒரு சமூகத்தயோ குற்றம் சாட்டுறதுனாலையோ நாம் சாதித்தது என்ன?


எத்தனையோ பேருக்கு கிடைக்காத நல்ல நல்ல விஷயங்கள், வசதிகள் நமக்கு கிடைக்குது. அப்படி இருக்கும் போது அதை வைத்து அவர்களுக்கு எப்படி உதவுவது அல்லது வழிகாட்டுவதுன்னு இல்லாம என்னங்க இது? ரொம்ப பயமா இருக்கு நம்ம சமூகத்தை நினைச்சா…

Autograph - 2

முதல் நாள் ஸ்கூலுக்கு சேர்க்க அம்மா அப்பா நான் 3 பேரும் போனோம். அந்த ஸ்கூல் HM எங்க பக்கத்து வீட்டுல தான் இருந்தாங்க. அதனால நல்லா சமத்தா அவங்க குடுத்த சாக்லேட், பிஸ்கட் எல்லாம் சாப்பிட்டுட்டு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் டாடா காட்டிட்டு உள்ளே போய்ட்டேன். உள்ள போனா எல்லாம் பொரன்டு பொரன்டு அழுதுகிட்டு இருக்காங்க. நான் பாட்டுக்கு போய் usha மிஸ் கிட்ட பேசி விளையடிக்கிட்டு இருந்தேன்.

அலமேலு மிஸ் அதாங்க எங்க HM அவங்க எங்க பக்கத்து வீடுன்னு சொன்னேன் இல்ல அவங்க அப்பா மார்கெட்ல கடை வெச்சிருந்தாரு. சனி கிழமை ஆனாக்க நானும் அவங்களோட போய்டுவேன். நல்லா ஊரெல்லாம் சுத்திட்டு அப்புறம் அவங்க குடுக்கற வெஜிடபிள் பிரியாணி எல்லாம் நல்லா சாப்பிட்டு வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட நல்லா பூசை வாங்கறது வழக்கம். என்ன அடி வாங்குனாலும் அடுத்த சனி கிழமை அவங்க கிளம்பும்போது மொத ஆளா வந்து நிப்பேன்.


ஸ்கூல்ல என்ன function நடந்தாலும் டான்ஸ், டிராமா எதுவா இருந்தாலும் நான் இல்லாம நடக்காது. ரொம்ப ஜாலியான நாட்கள் அது. நம்ம தொண்டை எட்டு ஊருக்கு கேட்குமே அதனால எப்பவுமே main role தான் பண்றது. நான் 1st படிக்கும் போது ஒரு ராஜா காலத்து நாடகம் ஒன்னு. நான் தான் ராஜா. கரெக்டா என் முன்னால இருந்த மைக் மட்டும் வேல செய்யல. ஆனா நான் பேசுனது கடைசி வர கேட்டுது. அதுக்காக சிறப்பு பரிசு எல்லாம் குடுத்தாங்க.


பரிசுன்ன உடனே தான் நினைவுக்கு வருது. அந்த காலத்துல ஸ்கூல்லயும் சரி வீட்டுல ஏதாவது விஷேசம்னாலும் சரி, சின்ன சின்ன எவெர்சில்வர் கிண்ணம் தான் குடுப்பாங்க. அதுவே ஒரு பெட்டி நிறைய இருக்கு எங்க வீட்டுல. அம்மா சொல்லுவாங்க இப்படி சின்ன சின்னதா அப்படி எங்கதான் வாங்குவாங்கலோன்னு…

Friday, January 19, 2007

Autograph - 1

நான் பிறந்தது 1983ம் வருஷம். அப்ப எங்க தாத்தா (அம்மா தாத்தா தான்) திருச்சில தான் இருந்தாரு... அவர் retire ஆன அப்புறம் தான் எங்க அம்மா கல்யாணமே நடந்தது... எங்க அம்மாவுக்கு ஒரே ஒரு அக்கா. அவங்களும் திருச்சில தான் இருந்தாங்க (இருங்க இருங்க இப்ப என்ன சொல்ல வர உங்கதையா இல்ல உங்க அம்மா கதையான்னு நீங்க கேக்குறது புரியுது.. ஒரு கதைன்னு சொல்ல வந்தா இந்த முன் கதை சுருக்கம் எல்லாம் போடுவாங்க இல்ல அது மாதிரி தான் இது... என்னை பற்றி சொல்லும் முன்ன ஒரு சின்ன முன்கதை சுருக்கம்)


நம்ம தான் எப்போவுமே கொஞ்சம் special தானே... 6 மாசத்துல இருந்தே அம்மாவ hospitalஏ இருக்க சொல்லிட்டாங்க... வேளா வேளைக்கு நல்லா சாப்பிட்டு தூங்கி அம்மா நான் பிறக்கும் போது கொஞ்சம் நல்லா தேறிட்டாங்க..


நான் பிறந்தது திருச்சில இருக்குற Christian mission hospitalஅ... அங்க இருந்து எங்க பெரியம்மா வீட்டுக்கு வ்ந்து ஒரு 10 நாள் stay... ரொம்ப தெரிஞ்ச மாதிரி சொல்றேன்னு doubt படாதீங்க... இதெல்லாம் எங்க அம்மா சொல்லி தான் எனக்கு தெரியும்


இப்போ அங்க இருந்து ராஜபாளையம் பயணம்... இந்த பாளையம்னு வந்தாலே ஜமீன் பரம்பரைனு கொஞ்சம் பெருமபடலாம்னா மொதல்லயே அப்பா E.Bல வேல செய்றார்னு சொல்லியாச்சு... Grr.... நற நற...


சின்ன வயசுல (இப்போவும் தான்) நான் ரொம்ப அழகா இருப்பேனா அதனால எப்பவும் ஊர் சுத்தல் தான்... யாராவது எங்க தெருவுல உள்ளவங்க வந்து தூக்கிட்டு போயிடுவாங்க... நல்லா அவங்க குடுக்கறத எல்லாம் சாப்பிட்டுட்டு நல்லா ஊர சுத்திட்டு வீட்டுக்கு தூங்க மட்டும் தான் வற்றது... அப்ப தெரியாம போச்சே இப்படி வளர்ந்த அப்புறம் பொட்டி தட்டிட்டு தூங்க கூட வீட்டுக்கு போக முடியாதுன்னு...

நான் தமிழ் பேப்பர்ல எழுதியே கிட்டதட்ட 6 வருஷம் ஆச்சு... அதனால ஏதாவது எழுத்து பிழை இருந்தா மன்னிச்சுகிட்டு மீதிக்கு பொற்காசாவோ Dollorஆவோ, Indian ரூவா இருந்தாலும் பரவாயில்லன்னு சொல்லிகிட்டு இப்பொ appeat ஆகுறது.....

ப்ரியா...

Wednesday, January 17, 2007

Autograph - இந்த சின்ன பிள்ளையின் முயற்சி

-
ரொம்ப fastஆ blog எழுத வந்தாச்சு.. ஆனா என்ன எழுதறது.. சரி நம்மள பத்தி எழுதலாம்னா இந்த சின்ன வயசுல (நம்புங்கப்பா சின்ன வயசுதான்) என்ன எழுதுறது..!!!
நாடோடி கூட்டம் மாதிரி தான் நம்ம வாழ்க்கை... அப்பாவுக்கு E.B.ல வேல. அவர் ட்ரான்ஸ்பர் ஆகுர ஊர் எல்லாம் நம்ம ஊர் தான். அப்படியே ஒரு 6 ஊர் பார்த்துட்டம்ல நாங்க...
துளசி அக்கா கூட சாட் பண்ணும் போது native எதுன்னு கேட்டேன்.. அவங்க என்ன திருப்பி nativeனு எத சொல்லுவீங்கன்னு ஒரு மடக்கு மடக்கினாங்க பாருங்க அன்னிக்கு யோசிக்க ஆரம்பிச்சது... இப்ப உங்களுக்கு சனி...
நம்ம வாழ்க்கை வரலாற எடுத்து விட்டு உங்க கிட்டயே ஒரு முடிவு கேக்கலாம்னு தான் இந்த பதிவு.. இது ஒரு தொடர வரும்... உங்க வரவேற்ப்பை பொருத்து விரிபடுத்தலாம்னு ஒரு எண்ணம்... என்ன சொல்றீங்க மக்களே...
இப்பவே சொல்லிட்டேன் "நாட்டாமை தீர்ப்பை மாதி சொல்லுன்னு" எல்லாம் சண்டை போட கூடாது...
இந்த சின்ன பிள்ளை பிறந்தது Rock fort express கிளம்பற ஊர்ல..
இப்படி சின்னபுள்ளதனமா என்ன விளையாட்டுன்னு திட்றது காதுல விளவே இல்லபா எனக்கு...

Tuesday, January 2, 2007

3. இணையத்தில் தமிழ் புத்தகங்கள்

என்ன போல கம்ப்யூட்டர்ல வேல செய்றவங்களுக்கு ஒரே ஆறுதல் இணையத்தில கிடைக்கிற e-books தான்... எனக்கு தெரிந்த தமிழ் websitesவோட முகவரிகள் சிலவற்றை பகிர்ந்துக்கிறேன்...


http://www.tamil.net/projectmadurai/
http://www.maraththadi.com/
http://www.nilacharal.com/
http://www.chennailibrary.com/ebooks/ebooks.html
www.ta.wikipedia.org
http://noolaham.net




இன்னும் எனக்கு தெரிந்ததை அவ்வப்போது சொல்கிறேன்...

உங்களுக்கு இதை தவிர ஏதாவது தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க...

Monday, January 1, 2007

2. புத்தாண்டு வாழ்த்துக்கள்











எல்லோருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்