Thursday, February 22, 2007

அய்யோ பயமா இருக்கு…

இணையம் இந்த நூற்றாண்டோட மிக சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கு. அதுலயும் வலைபதிவு அப்படிங்கறது இப்போ நல்லா பிரபலமாகிட்டு வருது. என்னை பொருத்தவரை வலைபதிவு அப்படிங்கறது ஒரு தனி மனிதரோ இல்லன்னா ஒரே அலைவரிசைல இருக்கற ஒரு குழுவோ தங்களோட உணர்வுகள சேமிச்சு வெக்கிற ஒரு இடமாக தான் நினைக்கிறேன். ஆனா இப்போ நடக்கறது என்ன?


ஒருத்தர ஒருத்தர் திட்டறதும், சண்டை போடுறதும், criticize பண்றதும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்த நாம சரியா பயன் படுத்தலையோன்னு தோனுது. மாத்தி மாத்தி சண்டை போடுறதுனாலையோ இல்ல தனிமனித அல்லது ஒரு சமூகத்தயோ குற்றம் சாட்டுறதுனாலையோ நாம் சாதித்தது என்ன?


எத்தனையோ பேருக்கு கிடைக்காத நல்ல நல்ல விஷயங்கள், வசதிகள் நமக்கு கிடைக்குது. அப்படி இருக்கும் போது அதை வைத்து அவர்களுக்கு எப்படி உதவுவது அல்லது வழிகாட்டுவதுன்னு இல்லாம என்னங்க இது? ரொம்ப பயமா இருக்கு நம்ம சமூகத்தை நினைச்சா…

Autograph - 2

முதல் நாள் ஸ்கூலுக்கு சேர்க்க அம்மா அப்பா நான் 3 பேரும் போனோம். அந்த ஸ்கூல் HM எங்க பக்கத்து வீட்டுல தான் இருந்தாங்க. அதனால நல்லா சமத்தா அவங்க குடுத்த சாக்லேட், பிஸ்கட் எல்லாம் சாப்பிட்டுட்டு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் டாடா காட்டிட்டு உள்ளே போய்ட்டேன். உள்ள போனா எல்லாம் பொரன்டு பொரன்டு அழுதுகிட்டு இருக்காங்க. நான் பாட்டுக்கு போய் usha மிஸ் கிட்ட பேசி விளையடிக்கிட்டு இருந்தேன்.

அலமேலு மிஸ் அதாங்க எங்க HM அவங்க எங்க பக்கத்து வீடுன்னு சொன்னேன் இல்ல அவங்க அப்பா மார்கெட்ல கடை வெச்சிருந்தாரு. சனி கிழமை ஆனாக்க நானும் அவங்களோட போய்டுவேன். நல்லா ஊரெல்லாம் சுத்திட்டு அப்புறம் அவங்க குடுக்கற வெஜிடபிள் பிரியாணி எல்லாம் நல்லா சாப்பிட்டு வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட நல்லா பூசை வாங்கறது வழக்கம். என்ன அடி வாங்குனாலும் அடுத்த சனி கிழமை அவங்க கிளம்பும்போது மொத ஆளா வந்து நிப்பேன்.


ஸ்கூல்ல என்ன function நடந்தாலும் டான்ஸ், டிராமா எதுவா இருந்தாலும் நான் இல்லாம நடக்காது. ரொம்ப ஜாலியான நாட்கள் அது. நம்ம தொண்டை எட்டு ஊருக்கு கேட்குமே அதனால எப்பவுமே main role தான் பண்றது. நான் 1st படிக்கும் போது ஒரு ராஜா காலத்து நாடகம் ஒன்னு. நான் தான் ராஜா. கரெக்டா என் முன்னால இருந்த மைக் மட்டும் வேல செய்யல. ஆனா நான் பேசுனது கடைசி வர கேட்டுது. அதுக்காக சிறப்பு பரிசு எல்லாம் குடுத்தாங்க.


பரிசுன்ன உடனே தான் நினைவுக்கு வருது. அந்த காலத்துல ஸ்கூல்லயும் சரி வீட்டுல ஏதாவது விஷேசம்னாலும் சரி, சின்ன சின்ன எவெர்சில்வர் கிண்ணம் தான் குடுப்பாங்க. அதுவே ஒரு பெட்டி நிறைய இருக்கு எங்க வீட்டுல. அம்மா சொல்லுவாங்க இப்படி சின்ன சின்னதா அப்படி எங்கதான் வாங்குவாங்கலோன்னு…