Thursday, February 22, 2007

அய்யோ பயமா இருக்கு…

இணையம் இந்த நூற்றாண்டோட மிக சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கு. அதுலயும் வலைபதிவு அப்படிங்கறது இப்போ நல்லா பிரபலமாகிட்டு வருது. என்னை பொருத்தவரை வலைபதிவு அப்படிங்கறது ஒரு தனி மனிதரோ இல்லன்னா ஒரே அலைவரிசைல இருக்கற ஒரு குழுவோ தங்களோட உணர்வுகள சேமிச்சு வெக்கிற ஒரு இடமாக தான் நினைக்கிறேன். ஆனா இப்போ நடக்கறது என்ன?


ஒருத்தர ஒருத்தர் திட்டறதும், சண்டை போடுறதும், criticize பண்றதும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்த நாம சரியா பயன் படுத்தலையோன்னு தோனுது. மாத்தி மாத்தி சண்டை போடுறதுனாலையோ இல்ல தனிமனித அல்லது ஒரு சமூகத்தயோ குற்றம் சாட்டுறதுனாலையோ நாம் சாதித்தது என்ன?


எத்தனையோ பேருக்கு கிடைக்காத நல்ல நல்ல விஷயங்கள், வசதிகள் நமக்கு கிடைக்குது. அப்படி இருக்கும் போது அதை வைத்து அவர்களுக்கு எப்படி உதவுவது அல்லது வழிகாட்டுவதுன்னு இல்லாம என்னங்க இது? ரொம்ப பயமா இருக்கு நம்ம சமூகத்தை நினைச்சா…

14 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பயப்படாதீங்க.
இப்பத்தான் நீங்களும் சமூகத்தில் ஒருத்தராய் மாறியிருக்கீங்க.பாருங்க சமூகத்தின் சண்டையையும் , சமூக நிலையினையும் criticize செய்து பதிவு போட்டு இருக்கீங்களே.இப்படித்தான்.எல்லாமே.
:-)

siva gnanamji(#18100882083107547329) said...

பதிவே பொடறதில்லே....போட்டா
ஒரே நாள்ளே 2 பதிவு பொட்டு மிரட்ட்றது.......
"அய்யோ பயமா இருக்கு...."

வடுவூர் குமார் said...

இது ஆரம்பம் தான்.
வரவேண்டியது இன்னும் வரவில்லை- உங்களுக்கு??!!
கவலைப்படாமல்,எழுதிக்கொண்டிருங்கள்.

Meenapriya said...

//சமூகத்தின் சண்டையையும் , சமூக நிலையினையும் criticize செய்து பதிவு போட்டு இருக்கீங்களே.இப்படித்தான்.எல்லாமே//

நான் கிட்டதட்ட 1 வருஷமா வெறும் வாசிப்பாளராதான் இருந்தேன். இந்த சண்டை எல்லாம் பார்த்து தான் நம்ம தனியா எழுத வேண்டாம்னு நினைச்சேன். என்ன பண்றது மனசில் தோணுத சொல்லியாச்சு அந்த திருப்தி போதும்.

Meenapriya said...

//"அய்யோ பயமா இருக்கு...."//

அந்த பயம் இருக்கட்டும். :)))

Meenapriya said...

//வரவேண்டியது இன்னும் வரவில்லை- உங்களுக்கு??!!//

ஏங்க இப்போவே மிரட்டல் எல்லாம் விடுறீங்க.. சின்ன பொண்ணு நானு...

siva gnanamji(#18100882083107547329) said...

"அய்யோ பயமா இருக்கு" - இது உங்க பதிவின் தலைப்பு....

பயமில்லே;முன்ஜாக்கிறதை உணர்வு..

நல்லாவே எழுதுறீங்க; ஜமாய்ங்க

சிவஞானம்ஜி

siva gnanamji(#18100882083107547329) said...

அடுத்த பதிவு மார்ச் 22 லா?

Meenapriya said...

i dont have tamil fonts in my system now. trying to get it done. till then what to do...

பொன்ஸ்~~Poorna said...

என்னாச்சு? தமிழ் fonts இல்லையின்னா பிரச்சனை இல்லை.. இங்க போங்க.. நீங்களும் தமிழ் தட்டலாம்.. எங்கே இருந்தாலும் :)

siva gnanamji(#18100882083107547329) said...

ஏப்ரல் 22 ம் போச்சு
இனி மே 22 வரையில் ...........

siva gnanamji(#18100882083107547329) said...

மார்ச் 22
ஏப்ரல் 22
மே 22
ஜுன் 22 ?

துளசி கோபால் said...

அப்படியெல்லாம் பயப்படற ஆளாத் தெரியலையே எனக்கு:-)))))

முதல்லே கால் வைக்கத்தான் பயம். அப்புறம் பாருங்க............

எதிர்நீச்சல்தான்:-))))

குளுர் விட்டுருமுல்லே? :-)))))

Meenapriya said...

இது ரொம்ப முன்ன போட்ட பதிவு.. புது பதிவுகளையும் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க