Wednesday, January 17, 2007

Autograph - இந்த சின்ன பிள்ளையின் முயற்சி

-
ரொம்ப fastஆ blog எழுத வந்தாச்சு.. ஆனா என்ன எழுதறது.. சரி நம்மள பத்தி எழுதலாம்னா இந்த சின்ன வயசுல (நம்புங்கப்பா சின்ன வயசுதான்) என்ன எழுதுறது..!!!
நாடோடி கூட்டம் மாதிரி தான் நம்ம வாழ்க்கை... அப்பாவுக்கு E.B.ல வேல. அவர் ட்ரான்ஸ்பர் ஆகுர ஊர் எல்லாம் நம்ம ஊர் தான். அப்படியே ஒரு 6 ஊர் பார்த்துட்டம்ல நாங்க...
துளசி அக்கா கூட சாட் பண்ணும் போது native எதுன்னு கேட்டேன்.. அவங்க என்ன திருப்பி nativeனு எத சொல்லுவீங்கன்னு ஒரு மடக்கு மடக்கினாங்க பாருங்க அன்னிக்கு யோசிக்க ஆரம்பிச்சது... இப்ப உங்களுக்கு சனி...
நம்ம வாழ்க்கை வரலாற எடுத்து விட்டு உங்க கிட்டயே ஒரு முடிவு கேக்கலாம்னு தான் இந்த பதிவு.. இது ஒரு தொடர வரும்... உங்க வரவேற்ப்பை பொருத்து விரிபடுத்தலாம்னு ஒரு எண்ணம்... என்ன சொல்றீங்க மக்களே...
இப்பவே சொல்லிட்டேன் "நாட்டாமை தீர்ப்பை மாதி சொல்லுன்னு" எல்லாம் சண்டை போட கூடாது...
இந்த சின்ன பிள்ளை பிறந்தது Rock fort express கிளம்பற ஊர்ல..
இப்படி சின்னபுள்ளதனமா என்ன விளையாட்டுன்னு திட்றது காதுல விளவே இல்லபா எனக்கு...

7 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

ஸோ ஓரு வழியா முடிவு பண்ணிட்டீங்க......வாழ்த்துகள்..

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் எந்த ஊர்லே இருந்து கிளம்புது?

மொதல்லே திருச்சியிலே இருந்து.....
அப்றம் தஞ்சாலூர்....
இப்ப கும்மோணம்....
இதில எந்த ஊரச் சொல்றீங்க?

Meenapriya said...

ரொம்ப thanks sir... ஒரு comment கூட வரலன்ன உடனே எனக்கு அய்யோன்னு இருந்தது

Meenapriya said...

திருச்சி தான்... யாருப்பா அது என்ன கேக்காம train ரூட் எல்லாம் மாத்துனது

டிபிஆர்.ஜோசப் said...

ஒரு comment கூட வரலன்ன உடனே எனக்கு அய்யோன்னு இருந்தது //

கவலையேபடாதீங்க.. பின்னூட்டம் எத்தன வருதுங்கறது முக்கியமில்ல..

ஜி! வந்தா தமிழ்மணமே வந்தா மாதிரித்தான்..

ச்சும்மா எழுதுங்க.. நாங்க இருக்கோமில்லே.. எழுதி பதிஞ்சவுடனே ஒங்க ப்ளாகோட லிங்க எனக்கு அனுப்பிருங்க. இல்லன்னா நா தமிழ்மணத்துக்கு வரும்போது ஒருவேளை ஒங்க பதிவு முகப்பு பக்கத்துலருந்தே போயிரும். யார் போட்டாலும் போடாட்டாலும் என்னுடைய பின்னூட்டம் தினமும் வரும்.. அதாவது நான் சென்னையிலிருக்கும் நாட்களில்.. போதுமில்ல?

டிபிஆர்.ஜோசப் said...

மொதல்லே திருச்சியிலே இருந்து.....
அப்றம் தஞ்சாலூர்....
இப்ப கும்மோணம்....
இதில எந்த ஊரச் சொல்றீங்க? //

ஜி! இப்படியெல்லாம் கேட்டு மிரட்டாதீங்க.. நீங்க ரிட்டையராச்சில்லே.. பேசாம கேட்டுக்கிட்டு இருக்கணும்:)

Meenapriya said...

ரொம்ப நன்றி joseph சார்... இந்த பதிவு தமிழ்மணத்துல வருதான்னு எப்படி தெரிஞ்சுகற்து

வடுவூர் குமார் said...

வாங்க வாங்க
இப்ப நாங்க பின்னூட்டம் போடுகிறோம் அல்லவா? அப்படி என்றால் தமிழ்மணத்தில் காண்பிக்கிறது என்று அர்த்தம்.:-))
என்னப்பா இது!! அவரிடம் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டேனே?