Autograph - 1
நான் பிறந்தது 1983ம் வருஷம். அப்ப எங்க தாத்தா (அம்மா தாத்தா தான்) திருச்சில தான் இருந்தாரு... அவர் retire ஆன அப்புறம் தான் எங்க அம்மா கல்யாணமே நடந்தது... எங்க அம்மாவுக்கு ஒரே ஒரு அக்கா. அவங்களும் திருச்சில தான் இருந்தாங்க (இருங்க இருங்க இப்ப என்ன சொல்ல வர உங்கதையா இல்ல உங்க அம்மா கதையான்னு நீங்க கேக்குறது புரியுது.. ஒரு கதைன்னு சொல்ல வந்தா இந்த முன் கதை சுருக்கம் எல்லாம் போடுவாங்க இல்ல அது மாதிரி தான் இது... என்னை பற்றி சொல்லும் முன்ன ஒரு சின்ன முன்கதை சுருக்கம்)
நம்ம தான் எப்போவுமே கொஞ்சம் special தானே... 6 மாசத்துல இருந்தே அம்மாவ hospitalஏ இருக்க சொல்லிட்டாங்க... வேளா வேளைக்கு நல்லா சாப்பிட்டு தூங்கி அம்மா நான் பிறக்கும் போது கொஞ்சம் நல்லா தேறிட்டாங்க..
நான் பிறந்தது திருச்சில இருக்குற Christian mission hospitalஅ... அங்க இருந்து எங்க பெரியம்மா வீட்டுக்கு வ்ந்து ஒரு 10 நாள் stay... ரொம்ப தெரிஞ்ச மாதிரி சொல்றேன்னு doubt படாதீங்க... இதெல்லாம் எங்க அம்மா சொல்லி தான் எனக்கு தெரியும்
இப்போ அங்க இருந்து ராஜபாளையம் பயணம்... இந்த பாளையம்னு வந்தாலே ஜமீன் பரம்பரைனு கொஞ்சம் பெருமபடலாம்னா மொதல்லயே அப்பா E.Bல வேல செய்றார்னு சொல்லியாச்சு... Grr.... நற நற...
சின்ன வயசுல (இப்போவும் தான்) நான் ரொம்ப அழகா இருப்பேனா அதனால எப்பவும் ஊர் சுத்தல் தான்... யாராவது எங்க தெருவுல உள்ளவங்க வந்து தூக்கிட்டு போயிடுவாங்க... நல்லா அவங்க குடுக்கறத எல்லாம் சாப்பிட்டுட்டு நல்லா ஊர சுத்திட்டு வீட்டுக்கு தூங்க மட்டும் தான் வற்றது... அப்ப தெரியாம போச்சே இப்படி வளர்ந்த அப்புறம் பொட்டி தட்டிட்டு தூங்க கூட வீட்டுக்கு போக முடியாதுன்னு...
நான் தமிழ் பேப்பர்ல எழுதியே கிட்டதட்ட 6 வருஷம் ஆச்சு... அதனால ஏதாவது எழுத்து பிழை இருந்தா மன்னிச்சுகிட்டு மீதிக்கு பொற்காசாவோ Dollorஆவோ, Indian ரூவா இருந்தாலும் பரவாயில்லன்னு சொல்லிகிட்டு இப்பொ appeat ஆகுறது.....
ப்ரியா...
5 comments:
Week end என்னால computer access பண்ண முடியாது... அதனால திங்கள் காலை முதல் வேல comments publish பண்றது... கோவிச்சுக்காதீங்க மக்களே
வாழ்த்து(க்)கள் பிரியா.
ஓசைப்படாம ப்ளொக் ஆரம்பிச்சுட்டீங்க?
ஒரு வார்த்தை சொல்லி இருந்தா........
சிவப்புக் கம்பளம் விரிச்சு, மயில் டான்ஸ், குதிரையாட்டம், கரகாட்டம் எல்லாம்
வச்சு வரவேற்பு கொடுத்துருக்கலாமுல்லே?
நல்லாதான் இருக்கு ஆரம்பம். சந்தோஷம்.இன்னும் எழுதுங்க.
ராஜபாளையம் தோழி ஒருத்தர் ப்ளொக் எழுதறார் தெரியுமா?
பெரிய இடம் அவுங்க.
how long will u sleep? till feb 19 th?
Why till Feb 19th in specific. I am out of station and could not read the tamil fonts. as your comment is in english i could reply. i will be back soon and continue this
/நான் பிறந்தது 1983ம் வருஷம்//
Same Pinch :-)
Post a Comment